திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழப்பு
திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.;
அரியலூர்,ஆக.16- அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர், நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமானூர் அருகேயுள்ள குருவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தேசிங்குராஜன் மகன் கஜேந்திரன்(14). அப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்த இவர், வெள்ளிக்கிழமை மாலை அங்குள்ள கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த கிராம மக்கள், ஆற்றில் இறங்கி நீண்ட நேர தேடலுக்கு பிறகு மாணவரை மீட்டு, குருவாடி அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு மாணவரை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தூத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.