செந்துறை அருகே ரயில் மோதி இளைஞர் உயிரிழப்பு.

செந்துறை அருகே ரயில் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்..;

Update: 2025-08-16 13:15 GMT
அரியலூர், ஆக.16: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே ரயில் மோதி சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தார். செந்துறை அடுத்த நெய்வனம், அரசு மருத்துவமனை சாலையைச் சேர்ந்தவர் குணசேகர் மகன் பாஸ்கர்(38). இவர் குவைத்தில் 2 ஆண்டுகளாக பணிபுரிந்துவிட்டு, கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஊருக்கு திரும்பியுள்ளார். 2 மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்த பாஸ்கர், வெள்ளிக்கிழமை இரவு செந்துறை}ஆர்.எஸ்.மாத்தூர் ரயில் நிலையங்களிடையே, ரயில் தண்டாவளத்தை கடக்க முயற்சித போது , சென்னையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸôர், சடலத்தை மீட்டு, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். .

Similar News