காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ஆடி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு;
பெரம்பலூர் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (16/08/25) ஆடி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீப ஆராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவரை தரிசித்து சென்றனர்.