ராணிப்பேட்டை:மூதாட்டிக்கு பட்டா வழங்கிய அமைச்சர்

மூதாட்டிக்கு பட்டா வழங்கிய அமைச்சர்;

Update: 2025-08-17 05:41 GMT
சுமைதாங்கி கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி தாயுமானவர் திட்டத்தை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா கேட்டு அமைச்சர் காந்தியிடம் மனு கொடுத்தார். அதை தொடர்ந்து வருவாய் துறையினர் விசாரணை நடத்தி பட்டா தயார் செய்தனர். அதற்கான பட்டா ஆணையை மூதாட்டி வள்ளியம்மாளிடம் அமைச்சர் காந்தி நேரில் சென்று வழங்கினார்.

Similar News