முரசொலி மாறன் படத்திற்கு எம்எல்ஏ மரியாதை!
முரசொலி மாறனின் 92ஆவது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 17) கொண்டாடப்பட்டு வருகிறது.;
முரசொலி மாறனின் 92ஆவது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 17) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில், முரசொலி மாறனின் படத்திற்கு வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா, மாவட்ட அவை தலைவர் முகமது சகி, மண்டல குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.