லத்தேரியில் இருவருக்கு கொலை மிரட்டல்!

லத்தேரியில் கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்தனர் ‌;

Update: 2025-08-17 09:37 GMT
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவருக்கும், அன்னங்குடி பகுதியைச் சேர்ந்த பவித்ரன் (25), வேலாயுதம் (70) ஆகியோருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இருவரும் தனித்தனியே சதீஷ்குமார் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுவதாக லத்தேரி போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சதீஷ் குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News