காட்பாடி துணை மின் நிலையத்தில் மின் நிறுத்தம்!
காட்பாடி துணை மின் நிலையத்தில், அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.;
வேலூர் மாவட்டம் காட்பாடி துணை மின் நிலையத்தில், அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காந்தி நகர், வி.ஜி.ராவ் நகர், செங்குட்டை, கல்புதூர், காங்கேயநல்லூர், வண்டறந்தாங்கல், கழிஞ்சூர், சேனூர், வஞ்சூர், திருமணி, கிறிஸ்டியான்பேட்டை, காட்பாடி, பள்ளிகுப்பம், வடுகன்குட்டை, எல்.ஜி.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.