ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி விழா கோலாகலம்!
அருள்மிகு ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.;
வேலூர் மாவட்டம் வளத்தூர் அடுத்த வரதாபாளையம் கிராமத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயந்தி முன்னிட்டு அருள்மிகு ராதா ருக்மணி சமேத பகவான் ஸ்ரீகிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்த கண்கொள்ளா காட்சி கண்டு பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பம்பை சிலம்பாட்டம் பஜனை பாடல்களுடன் ஆடல் பாடல் கொண்டாட்டம் என ஆடிப்பாடி மகிழ்ந்தனர் .விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.