ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வை ஆட்சியர் ஆய்வு!

வேலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.;

Update: 2025-08-17 16:02 GMT
வேலூர் மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தேர்வு 6 மையங்களில் இன்று (ஆக.17) நடைபெற்றது. இந்தத் தேர்வில் 1,823 பேர் எழுதினார். வேலூர் முஸ்லிம் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார் உடன் இருந்தார். தேர்வு எழுத அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.

Similar News