அரிகலபாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்;
அரிகலபாடியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. எம்எல்ஏ ரவி தலைமை வகித்து பேசுகையில் 20ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். அவரது பேச்சை எல்லாரும் கேட்க வேண்டும். அலைகடலென நிர்வாகிகள் திரண்டு வரவேண்டும் என்றார். முன்னாள் எம்பி அரி, ஒன்றிய செயலாளர் விஜயன், ஒன்றிய கவுன்சிலர் வினோத்குமார், இளைஞரணி செயலாளர் பிரகதீஸ்வரன், ஜெ.பேரவை செயலாளர் சங்கர் கலந்துகொண்டனர்.