காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள்.
மதுரையில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்;
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் தூய்மை பணியாளர்கள் இன்று முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாநகராட்சி பணிகளில் தனியார் நிறுவனத்தை எதிர்த்தும், குறைந்தபட்ச ஊதியமாக 26 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஆக.18) காலை முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் 800க்கும் அதிகமான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். மாநகராட்சி வாயிற் கதவுகள் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.