ஓசூரில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை.
ஓசூரில் மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் -தேன்கனிக் கோட்டை பகுதியை சேர்ந்தவர் ரத்னாபாய் (75) இவர் நீண்ட காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் பல்வேறு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணம் ஆகவில்லை வந்தார். இதனால் மனமுடைந்த ரத்தினாபாய் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்த அவரை குடும்பத்தார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மூதாட்டி ரத்னாபாய் உயிரிழந்தார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.