ஓசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்.

ஓசூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல்;

Update: 2025-08-18 11:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்துள்ள உத்தனப்பள்ளி பகுதியில் 110 ஆண்டுகளாக உத்தனப்பள்ளியில் செயல்பட்டு வந்த அஞ்சல் அலுவலகம் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பாக கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கு எந்த எவ்வித முன்னறிவிப்பும் இன்றி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உத்தனப்பள்ளி பகுதியை சோ்ந்த 50க்கும் மேற்பட்டோர். நேற்று காவல் நிலையம் முன்பாக ஒரு மணிநேரத்திற்கு மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என போலீசார் கூறியதை அடுத்து மறியலை கை விட்டனர். அதனால் ஒரு மணி நேரம் ராயக்கோட்டை- ஒசூா் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News