போலீசார் கிராம மக்களுக்கிடையே தள்ளுமுள்ளு

மதுரை உசிலம்பட்டி அருகே போலீசார் மற்றும் கிராம மக்களுக்கு இடையே தள்ளுமுள்ளு நடைபெற்றது .;

Update: 2025-08-18 15:29 GMT
மதுரை உசிலம்பட்டி அருகே உ.மாரிப்பட்டி கிராமத்தில் காவல்துறை பணியாற்றும் குடும்பத்தினர் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் இதனால் கோவிலுக்கு செல்ல பாதை இல்லை என்றும் இதனை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று (ஆக.18) ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று அறிவித்த நிலையில் எந்த அதிகாரியும் வரவில்லை என்பதால் இன்று கிராம மக்கள் உசிலம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . அங்கு வந்த உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார் கிராம மக்களிடம் பேசி விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று கூறியதால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Similar News