தவெக மாநாடு. போக்குவரத்தில் மாற்றம்
மதுரையில் நடைபெற உள்ள தவெக மாநாடை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.;
மதுரை மாவட்டத்தில் வருகின்ற 21.08.2025ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் அதிமானோர் கலந்து கொள்ள உள்ளதை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.