தையல் இயந்திரங்கள் வழங்கிய ஆட்சியர்!
பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.;
வேலூர் மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மற்றும் வேலூர் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் தலா ரூ.9,720/- வீதம் 7 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்களை இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி வழங்கினார்.இந்நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா உடனிருந்தனர்.