ஆற்காடு அருகே டயர் வெடித்து அரசு பேருந்து விபத்து!
டயர் வெடித்து அரசு பேருந்து விபத்து!;
ஆற்காடு அடுத்த வேப்பூர் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததால், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து விபத்துக்குள்ளானது. சாலை நடுவே உள்ள டிவைடரில் மோதிய பேருந்து, எதிர்சாலையில் சென்ற கார் மீது மோதி பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.