கந்திகுப்பத்தில் விண்ணரசி அன்னை ஆலய திருத்தேர் பவனி.

கந்திகுப்பத்தில் விண்ணரசி அன்னை ஆலய திருத்தேர் பவனி.;

Update: 2025-08-19 09:50 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த கந்திகுப்பத்தில் உள்ள தூய விண்ணரசி அன்னை ஆலயத்தில் தேர்த்திருவிழா கடந்த 10-ஆம் தேதி அன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் இதில் பல் வேறு மறைமாவட்ட ஆயர்கள் தலைமையில் திருப்பலி நடந்தது.இந் நிகழ்ச்சிகளில் ஒன்றான அன்னை தேர் பவனி வாண வேடிக்கையுடன் நேற்று முன்தினம் இரவு நடந்தது. முன்னதாக, காலை தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் திருவிழா திருப்பலி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரை அம்புரோஸ் மந்திரித்து தொடங்கி வைத்தார். இந்த தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் நள்ளி ரவு ஆலையத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர் கள் கலந்து கொண்டனர்.

Similar News