கிருஷ்ணகிரி:சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
கிருஷ்ணகிரி:சாலை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.;
கிருஷ்ணகிரி நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்கம் சார்பில் முகமூடி அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கோட்டத்தலைவர் திம்மராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர் வாழ்வா தார கோரிக்கைகளை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்றக்கோரி சென்னையில் கடந்த 12-ஆம் தேதி நடந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற சாலைப்பணியாளர்களை கைது செய்து கொடுமைப்படுத் தியதாக தமிழக அரசையும், காவல்துறையையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.இதில் ஏராளமானோர் பலர் கலந்து கொண்ட னர்.