ஜெயங்கொண்டத்தில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம்
ஜெயங்கொண்டத்தில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து விழிப்புணர்வுகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வாகன ஓட்டிகள் இடமும் விநியோகம் செய்தனர்;
அரியலூர் ஆக.19- ஜெயங்கொண்டம் பகுதிகளில் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் ஏற்படுத்தி வருகின்றனர். இன்றளவும் வாகன ஓட்டிகள் சுமார் கடந்த சில வருடங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தி சொல்வதன் மூலம் சுமார் தற்போது 60% சதவீத மக்கள் மட்டுமே தலைக்கவசம் அணிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் ஜெயங்கொண்டம் செந்துறை பிரிவு ரோட்டில் யூனியன் ஆபீஸ் அருகே வாகனச் சோதனையின் போது அவ்வழியே வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது சீட் பெல்ட் அணிவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வாகனங்களை இயக்கும்போது மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக் கூடாது என்று அறிவுரை வழங்கியும் சாலை விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் 18 வயது நிரம்பாத வாகன உரிமம் பெறாத யாரும் வாகன ஓட்டக்கூடாது எனவும் அவ்வாறு ஓட்டி வந்தால் அதற்கு அவர்களுடைய பெற்றோர்களே காரணம் என பெற்றோர் மீது வழக்கு பதியப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.