முகாமிற்கான நிதியை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
மதுரை உசிலம்பட்டியில் முகாம் காண நிதியினை உடனே வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மதுரை மாவட்ட துணை தலைவர் பெரியகருப்பன், ஆசை தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (ஆக.19)நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்திய நிதியை விரைந்து வழங்க கோரியும், முகாம் நடத்தியதன் மூலம் ஊரக வளர்ச்சிதுறை அலுவலர்களை நிதி நெருக்கடிக்கு ஆளாக்கியதாக கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.