வேலூர் சிப்காட் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுரை மேலூர் அருகே புதிதாக சிப்காட் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்;
மதுரை மேலூர் அருகே கல்லகாடு பகுதியில் 278 ஏக்கரில் சிப்காட் உமைப்பதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்ததற்கு. உள்ளூர் பகுதி மக்கள் கடுமையாக ஏதிர்ப்பு தெரிவித்த நிலையில் புதிதாக பொறுப்பேற்ற ஆட்சியரை சந்தித்து தங்கள் பகுதியில் சிப்காட் அமைத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்து சுட்டிக்காட்டி மனு அளித்தனர். கிராம் சபை கூட்டத்தில் சிப்காட் திட்டத்தை கைவிட கோரி தீர்மானங்களை நிறைவேற்ற மக்கள் முயன்றனர். இந்நிலையில் இன்று ( ஆக.19)காலை கல்லங்காடு பகுதில் காவல்த்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு நில அளவையர்கள் உதவியுடன் அளவீடு பணிகள் நடக்க இருந்தன. இதை அறிந்த நாகப்பன் சிவல்பட்டி, மூவன் சிவல்பட்டி, பூதமங்கலம்,கண்டுகபட்டி தாயம்பட்டி, முறவக் கிழவன்பட்டி, முத்தம்பட்டி,நல்ல சுக்காம்பட்டி,பெரிய சிவல்பட்டி, கம்பாளிப்பட்டி நெல்லுகுண்டுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த சுமார் 300 பேர்வரை திரண்டு வந்து, தங்களின் விவசாயம் கால்நடை மேய்ச்சல் உள்ளிடவற்றை பாதிக்கும் திட்டத்தை கைவிடுமாறு கோரினார். சம்பவ இடத்திற்கு வந்த மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்த முயன்றார். ஆனாலும் மக்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைக்கு 5பேர்மட்டும் கோட்டாட்சியர் அலுவகம் வருமாறு அழைப்பு விடுத்தார். இதற்கு குழுமியிருந்த மக்கள்,எந்தவிதமான பேச்சுவார்த்தையாக இருந்தாலும் அனைத்து மக்கள் முன்னிலையிலும் நடத்தப்பட வேண்டும் என்றனர் . ஏற்பாடு செய்வதாக வட்டாச்சியர் செந்தாமரை கூறிவிட்டு அந்த இடத்திலிருந்து கிளம்பினார்.இதனை அடுத்த வந்திருந்த வருவாய்த்துறையினர் காவல்துறையினர் சிப்காட் பணியாளர்கள் என அனைவரும் எவ்விதமான பணிகளை மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றனர்.