பாகலூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.
பாகலூர் அருகே மணல் கடத்திய லாரி பறிமுதல்.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் குணசிவா மற்றும் அதிகாரிகள் முகுலப்பள்ளி கேட் அருகே நேற்றுரோந்து பணியில் ஈடுபட்டார் அப்போது, அந்த பகுதியில் நின்றிருந்த லாரியை சோதனையிட்ட போது அதில் 6 யூனிட் மணல் கடத்தியது தெரிய வந்தது. இது குறித்து வட்டாட்சியர் குணசிவா அளித்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக் குப்பதிவு செய்து மணல் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.