பழமை வாய்ந்த கோயில் கும்பாபிஷேகம்

மதுரை உசிலம்பட்டி அருகே பழமை வாய்ந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது;

Update: 2025-08-20 11:47 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வகுரணி ஊராட்சிட்குட்பட்ட நாவார்பட்டி கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்து சோனைமுத்தையா விநாயகர் கோவில் புதியதாக கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று (ஆக.20) நடைபெற்றது. மங்கள இசை முழங்க கடம் புறப்பாடாகி சோனைமுத்தையா விநாயகர் கோவில் கோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளிக்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News