கிருஷ்ணகிரி: டூவீலர் மீது கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி.
கிருஷ்ணகிரி: டூவீலர் மீது கார் மோதிதனியார் நிறுவன ஊழியர் பலி.;
கிருஷ்ணகிரி சின்ன அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (38) பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில் தனியார் கல்லூரி அருகே டூவீலரில் அவரது மனைவி தீபிகா (29), உறவினர் பூஜாஸ்ரீ (17) சென்றனர். அப்போது அந்த வழியாக சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி உள்பட மூன்று பேர் படுகாயம் அடைந்த அவர்களைஅருகில் இருந்தவர்கள் மீட்டு ஒசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் போகும் வழியிலேயே சந்தோஷ்குமார் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.