ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு.

ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு.;

Update: 2025-08-20 12:48 GMT
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கம் புகழ்பெற்ற இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் ஆவணி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.இவ்விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், இளநீர், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் அலங்காரம் செய்து தீப ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது. சிவபெருமானும் அம்பாளும் கோயில் உள்பிரகாரத்தில் மூன்று முறை வலம் வந்தார்.இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News