தனியார் வங்கி மூலம் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுகளுக்கு கடன் வழங்கும் விழா

தனியார் வங்கி மூலம் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுகளுக்கு கடன் வழங்கும் விழா;

Update: 2025-08-20 12:49 GMT
தனியார் வங்கி மூலம் விவசாயிகள் மற்றும் சுய உதவி குழுகளுக்கு கடன் வழங்கும் விழா இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகள் பயிர் கடன் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து வங்கி கணக்கில் தொகை பெரும் திட்டத்தை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதில் விண்ணப்பித்த அன்றே பயிர் கடன் பெறும். இத்திட்டமூலம் அதிகபட்சம் ரூபாய் 12 லட்சம் வரை கடன் பெற முடியும் என தெரிவித்திருந்தார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் சென்ட்ரல் வங்கி மூலம் மேல்மருவத்தூர், சித்தாமூர், கடமலைபுத்தூர், மறைமலைநகர் உள்ளிட்ட வங்கி கிளைகள் மற்றும் மேல்மருவத்தூர் ஆன்மீக மக்கள் தொகை இயக்கம் இணைந்து மாபெரும் விவசாய கடன் வழங்கும் விழா மேல்மருவத்தூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 250 விவசாயிகளுக்கு ரூபாய் 6 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை கடன், சுய உதவி குழுக்கடன், விவசாயம் சார்ந்த தொழில் கடன், விவசாய பயிர் கடன் ஆகியவை வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக சென்ட்ரல் வங்கியின் மண்டல மேலாளர் பவன் அகர்வால் அவர்கள் கலந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு உடனடி கடன் உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்வில் மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரி செயல் அதிகாரி சிவக்குமார், மூத்த கிளை மேலாளர் அம்பிகா மற்றும் வங்கி கிளை மேலாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News