துணை குடியரசு தலைவர் வேட்பாளர் சி பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி - மாவட்ட பாஜக சார்பில் விநாயகர் திருக்கோயில் சிறப்பு வழிபாடு பூஜை
பூஜை;
இந்திய குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது உடல்நிலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார் இதனை அடுத்து புதிதாக துணை குடியரசு தலைவர் தேர்வுக்காக தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்தியா கூட்டணி சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் இந்த நிலையில் தேசிய ஜனநாயக பணி வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற வேண்டி தேனி மாவட்ட பாஜகவினர் சார்பில் கோயிலில் சிறப்பு வழிபாடு பூஜை நடத்தினர் தேனி பெத்தனாச்சி விநாயகர் திருக்கோயிலில் தேனி மாவட்ட தலைவர் ராஜபாண்டி தலைமையில் பாஜகவினர் துணை குடியரசுத் தலைவர் வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சிறப்பு வழிபாடு பூஜை நடத்தினர் இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்துகொண்டு சி.பி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற சிறப்பு பூஜைகள் நடத்தினர்