ஓசூர்: டூவீலர் மோதி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பலி.
ஓசூர்: டூவீலர் மோதி அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் பலி.;
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ராதாமோகன் (59) இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் உள்ள தனியார் செக்யூரிட்டி ஏஜென்சியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இவர் பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஓசூர் தர்கா முத்து மாரியம்மன் கோயில் அருகே நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த டூவீலர் ராதாமோகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த ஒசூர் சிப்காட் போலீசார் உடலை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.