ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் வருடமுழுவதும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.. அதனடிப்படையில் இன்று ( ஆக.20) ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல்கள் தினந்தோறும் நடைபெறும். முக்கிய நிகழ்வான புட்டு மண் சுமந்த லீலை மற்றும் நரியை பரியாக்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.