காவல் ஆணையர் தலைமையில் போலீசாரின் ஆலோசனை கூட்டம்
மதுரையில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு காவல் ஆணையர் தலைமையில் போலீசாரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.;
மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் நிறுவுதல் மற்றும் ஊர்வலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (ஆக.20) காவல் ஆணையர் லோகநாதன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாநகர எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் விநாயகர் சிலைகள் அமைப்பதில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் ஊர்வலங்கள் நடைபெறும் மாசி வீதிகள் மற்றும் திருப்பரங்குன்றம் பகுதிகளில் ஊர்வலத்தின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் காவல் துணை ஆணையர் (தெற்கு), காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) மற்றும் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) ஆகியோர் கலந்து கொண்டனர்