வாலாஜா சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை
சாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை;
வாலாஜா அரசுத் தலைமை மருத்துவமனையில் இருந்து வீசி மோட்டூர் பகுதி வரை சுமார் 300 மீட்டர் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். இச்சாலை முக்கியமான சாலை என்பதால் அவ்வழியாகச் செல்லும் நோயாளிகள் முதியோர்கள் மின்விளக்குகள் இல்லாததால் சில சமயங்களில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.