கூடைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா
கூடைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா;
செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில்,மாணவர்கள் விளையாட்டு திறன் மேம்பாட்டிற்காக 15 இலட்ச மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட கூடைப்பந்து விளையாட்டு மைதானம் திறப்பு விழா நடைப்பெற்றது. நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் எம்.கே.கார்த்திக் தண்டபாணி தலைமையில்,நகர்மன்ற துணைத்தலைவர் ஜி.கே.லோகநாதன், முன்னிலையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்துக்கொண்டு விளையாட்டு திடலை திறந்து வைத்து.போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு தொகை,பாராட்டு சான்றிதழ் மற்றும் பாதகை அணிவித்து பாராட்டினார். நிகழ்ச்சியில் உடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜிஜேந்திரன்,நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி ஜெகன், பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரசேகரன்,சமூக நல ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள்,நகர்மன்ற உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் மாணவர்கள் ஏராளமான கலந்துக்கொண்டனர்.