அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலி

மதுரை திருமங்கலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் பலியானார்.;

Update: 2025-08-21 14:49 GMT
மதுரை மாவட்டம் திருமங்கலம் சொக்கநாதன்பட்டியை சேர்ந்த அழகர்சாமியின் மகன் பன்னீர்செல்வம் (60) என்பவர் நேற்று முன்தினம் (ஆக.19) இரவு 8 மணியளவில் மதுரை ரிங் ரோடு கப்பலூர் ஐஓசி எதிரே சித்ரா ஹோட்டல் அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்ததால் திருமங்கலம் மருத்துவமனையின் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பயின்று நேற்று (ஆக.20) உயிரிழந்தார். இது குறித்து அவரது சகோதரர் சுந்தர்ராஜ் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News