நர்சிங் மாணவி மாயம். தந்தை புகார்
மதுரை பேரையூர் அருகே நர்சிங் மாணவி மாயமென புகார் அளிக்கப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டம் பேரையூர் மேல திருமாணிக்கம் வடக்கு தெருவில் வசிக்கும் பாண்டியின் மகள் சுவேதா( 19) என்பவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார் . இவர் நேற்று முன்தினம் காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று (ஆக.20) காலை இவரது தந்தை பாண்டி உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்