விஷம் அருந்திய நபர் மரணம்
மதுரை திருமங்கலம் அருகே மதுவுக்கு அடிமையானவர் விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை மாவட்டம் திருமங்கலம் உசிலை மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் இருளாண்டி தேவர் மகன் சேகர் (51) என்பவர் கேபிள் வேலை பார்த்து வருகிறார். இவர் மதுவுக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் (ஆக. 19) வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அவரது மனைவி திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.