கள்ளக்குறிச்சியில், மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் 'உயர்வுக்கு படி' நிகழ்ச்சி நடந்தது. இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரசின் நலத்திட்டங்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள், வங்கி நிதியுதவி மற்றும் உயர்கல்விக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கு வழிகாட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.