கோவில் புணரமைப்பு பணிகள் தொடக்கம்
மதுரை அருகே திருமோகூர் கோவிலில் புணரமைப்பு பணிகளை முதல்வர் தொடங்கி வைத்தார்.;
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று(22.08.2025) தலைமைச் செயலகத்தில், காணொளி காட்சி வாயிலாக மதுரை மாவட்டம், திருமோகூர், அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில் புனரமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு பார்வையிட்டார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.