திருமண்டல தேர்தல்: இருவர் போட்டியின்றி தேர்வு

திருமண்டல தேர்தல்: சாத்தான்குளம் சேகரத்தில் இருவர் போட்டியின்றி தேர்வு;

Update: 2025-08-22 11:46 GMT
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு டயோசீசன் தேர்தல் செப். 7ஆம்தேதி நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களுக்கான வேட்பு மனுக்களை சேகர தலைவர்கள் பெற்று வருகிறார்கள். சாத்தான்குளம் சேகரத்திற்கு இரண்டு திருமண்டல உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவதற்கு, சாத்தான்குளம் டாக்டர் ஆசிர்வாதம் மனோகரன் அணியை சேர்ந்த முன்னாள் திருமண்டல செயற்குழு உறுப்பினர் குணசீலன் தங்கதுரை, முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் கிருபாகரன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். இவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், இவர்கள் இருவரும் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு பெற்றனர். இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலரும், சேகர தலைவருமான டேவிட் ஞானையாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Similar News