வேளாண் இணை இயக்குனர் ஆய்வு

ஆய்வு;

Update: 2025-08-23 02:38 GMT
சங்கராபுரம் பகுதியில் பயிர் சாகுபடி பரப்பு மின்னணு பதிவேற்றம் பணியினை வேளாண்மை இணை இயக்குனர் ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 2025-26ம் ஆண்டு காரீப் பருவத்திற்கான பயிர் சாகுபடி பரப்பு மின்னணு பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. தன்னார்வலர்களைக் கொண்டு அனைத்து கிராமங்களிலும் இப்பணி நடந்து வருகிறது. சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தில் பயிர் சாகுபடி பரப்பு மின்னணு பதிவேற்றம் செய்யும் பணியினை மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் சத்தியமூர்த்தி ஆய்வு செய்து, களப்பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடிக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது சங்கராபுரம் வட்டார துணை வேளாண்மை அலுவலர் முருகேசன், தன்னார்வளர் வல்லரசு ஆகியோர் உடனிருந்தனர்.

Similar News