சக்தி வித்யாலயா பள்ளியில் கண் பரிசோதனை முகாம்
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இலவச கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.;
தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் இளஞ்செஞ்சிலுவை சங்கம், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் துளசி மெடிக்கல் சார்பில் கண் மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளரும் முதல்வருமான ஆ.ஜெயாசண்முகம் கண் பரிசோதனை முகாமினை தொடங்கி வைத்தார். மருத்துவமனை சார்பில் பரிசோதகர் கே.முத்து, சு.தமிழ்செல்வி, முகாம் ஒருங்கிணைப்பாளர் செ.அழகுலிங்கம் ஆகியோர் கண் பரிசோதனையும் மற்றும் துளசி மெடிக்கல் சார்பில் கார்த்திக், இசக்கிராஜன் ஆகியோர் சர்க்கரை நோய், இரத்த அழுத்த பரிசோதனையும் செய்தனர். இம்முகாமில் பள்ளியின் ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் மற்றும் சங்கர்காலனி, காமராஜ்நகர், 3-ம் மைல், திரு.வி.க நகர், இந்திரா நகர், பிரூடி காலனி ஆகிய பகுதிகளிலிருந்து பொதுமக்களும், பெரியோர்களும் இலவச பரிசோதனை முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் இளஞ்செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்கள் மற்றும் ஆசிரியைகள்