சின்னசேலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் பிரசாந் நேற்று ஆய்வு செய்தார். அதில் 1.17 கோடி ரூபாய் மதிப்பில் மரவானத்தம் நமச்சிவாயபுரம் - நாககுப்பம் சாலை மேம்பாட்டு பணி, 5.58 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பள்ளி வகுப்பறை புனரமைப்பு பணியை பார்வையிட்டு, மாணவர்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தார்.