எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது குடிபோதையில் கீழே விழுந்து கிடந்த அதிமுக நிர்வாகி!

எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது கலைந்து சென்ற பொதுமக்கள்| குடிபோதையில் கீழே விழுந்து கிடந்த அதிமுக நிர்வாகி!;

Update: 2025-08-23 07:10 GMT
எடப்பாடி பழனிச்சாமி பேசிக் கொண்டிருந்தபோது கலைந்து சென்ற பொதுமக்கள்| குடிபோதையில் கீழே விழுந்து கிடந்த அதிமுக நிர்வாகி! செங்கல்பட்டு மாவட்டம்,செய்யூர் மதுராந்தகம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டு இருந்த போது தனது பேச்சைக் கேட்காமல் திரளான பொதுமக்கள் கலைந்து சென்றனர்.எடப்பாடி பேசும் போது ஏன் கிளம்புகிறீர்கள் என பொதுமக்களிடம் கேட்டப் போது 4 மணியில் இருந்து நின்று கொண்டிருக்கிறோம் இதனால் கிளம்புகிறோம் என தெரிவிக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி வருகிறார் என்பதற்காக பொதுமக்களை வரவழைத்து நீண்ட நேரம் காத்திக்கிடக்க வைக்கின்றனர்.இதில் வயதானவர்கள் பலர் நீண்ட நேரம் நிற்க முடியாமல் ஆங்காங்கே அமர்ந்து கையில் வைத்துள்ள பதாகைகளை விசிறியாக பயன்படுத்தி இளைப்பாறி வருகின்றனர். இதுமட்டுமின்றி, அதிமுகவினர் ஆபத்தை உணராமல் மின்விளக்கு பொருத்தப்பட்ட கம்பங்கள்,ஜெனரேட்டர் ஆகியவற்றை மீது ஏறி விபரிதத்தில் ஈடுப்பட்டு வந்தனர். மேலும், அங்கு அதிமுகவினர் டி-சர்ட்டை அணிந்து கொண்டு ஒரு நபர் நிதானம் இழக்கும் அளவிற்கு மது அருந்தி கூட்டதின்னுள்ளே போதையில் மயங்கி விழுந்து புரண்டு கிடந்தார்.இதனால் கூட்டத்திற்கு வருகை தந்த பொதுமக்களிடம் முகச்சுளிப்பு ஏற்பட்டது ‌. மேலும்,செய்யூர் பகுதியில் எடப்பாடி பழனிச்சாமி வருகையின் போது அவரது வாகனம் அருகே பயன்படுத்திய ட்ரோன் (DRONE) அவரது வாகனத்தின் மேலே உள்ள மின் கம்பியில் சிக்கி மின்சார துண்டிப்பும் ஏற்பட்டது.பின்னர், எடப்பாடி பழனிச்சாமி வாகனம் மீது ஆட்கள் ஏறி அந்த ட்ரோனை எடுக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

Similar News