கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., தங்கவேல், நுகர்வோர் அலுவலரின் நேர்முக உதவியாளர் வினோத் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு நுகர்வோர் சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.