பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ

பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ;

Update: 2025-08-24 04:14 GMT
செங்கல்பட்டு மாவட்டம்,மறைமலைநகர் நகராட்சி பகுதியில் உள்ள சிவானந்தா ராஜாராம் சீனியர் செகண்டரி பள்ளியில் 9-வது ஆண்டு விழாவில். இதில் சிறப்பு விருந்தினராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, சான்றுகள் மற்றும் பரிசுகளும் ஆசிரியர்களுக்கு பரிசு தொகையும் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் லட்சுமி ராஜாராம்,தலைமை ஆசிரியர் சிவகாமி,மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News