அடையாளம் தெரியாத வாகனம் ஓவியத்தில் ஒருவர் உயிரிழப்பு
மதுரை கொட்டாம்பட்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் ஓவியத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.;
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே கொட்டப்பட்டி சூரப்பட்டு குரூப் கிராம நிர்வாக அதிகாரியான அழகுராஜன் என்பவருக்கு கிடைத்த தகவலின் படி மதுரை திருச்சி-நான்கு வழிச்சாலையில் சூரப்பட்டி புதூர் விலக்கு அருகே நேற்று முன்தினம் (ஆக.22) அதிகாலை 4.30 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் சென்று பார்த்துவிட்டு இது குறித்து கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.