வீட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை
மதுரை அருகே வீட்டில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை அருகே சிக்கந்தர் சாவடி, நண்பர்கள் காலனியில் வசிக்கும் அனிதா (31) என்பவர் பாலு என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அனிதாவின் கணவர் சுந்தர் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்து வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில் மனவிரக்தி அடைந்த அனிதா நேற்று (ஆக.23) காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து அனிதாவின் தந்தை பாலு அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து விசாிக்கின்றனர்.