ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு எம்எல்ஏ மனு
மதுரை உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஐயப்பன் எம்எல்ஏ காவல் நிலையத்தில் மனு அளித்தார்;
மதுரை மாவட்டம் வைகை அணையில் போதுமான கொள்ளளவு தண்ணீர் இருந்தும் உசிலம்பட்டி 58 கால்வாயில் தண்ணீர் திறக்கப்படவில்லை. அதனால் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. தற்பொழுது வைகை அணையில் முழு கொள்ளளவு உள்ளதால் தண்ணீரை திறக்க கோரி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கு வருகின்ற 29ஆம் தேதி காலை முருகன் கோவில் முன்பாக 58 கால்வாய் சங்க நிர்வாகிகள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மீது புதுமை மீட்க குழு நிர்வாகிகள் இணைந்து ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதற்கு அனுமதி கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் காவல் நிலையத்தில் மனு அளித்தார்.