தேசிய அடையாள அட்டை வழங்கல்

வழங்கல்;

Update: 2025-08-24 07:09 GMT
சின்னசேலம் லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். உதயசூரியன் எம்.எல்.ஏ., சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அரசு எலும்பு முறிவு டாக்டர் பாலசுப்ரமணியன், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் செல்வபிரியா, மனநல டாக்டர் சரஸ்வதி, கண் டாக்டர் காயத்ரி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் 85 மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். அதில் தகுதிவாய்ந்த, 73 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை உதயசூரியன் எம்.எல்.ஏ., வழங்கினார். அத்துடன் 3 மாற்றுத்திறனாளிகள், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.

Similar News