பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக்கடன்

நேர்த்திக்கடன்;

Update: 2025-08-24 07:15 GMT
சின்னசேலம் விஜயபுரம் வேதவல்லி மாரியம்மன் கோவிலில் நாளை 25ம் தேதி தேர் திருவிழா நடக்கிறது. விழாவையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு கோவிலில் இருந்து 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீச்சட்டி ஏந்தியபடி மூங்கில்பாடி ரோடு, விஜயபுரம், சேலம் மெயின் ரோடு வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் சன்னதியை அடைந்தனர். அங்கு அம்மனுக்கு 17 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, மகா தீபாராதானை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Similar News